Skip to main content

சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை... 

Published on 21/09/2018 | Edited on 21/09/2018

 

சீனாவிலுள்ள பீஜீங் வெளிநாட்டு கல்வி பல்கலைக்கழகத்தில் கடந்த திங்கள் அன்று தமிழ் மொழிக்கு என்று தனி படிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த படிப்பை கற்கும் மாணவர்களுக்கு இதை முடித்து பட்டம் பெற நான்கு வருடங்கள் ஆகும்.
 

தற்போது இந்த தமிழ் மொழியை கற்றுக்கொள்ள 10 சீன மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதில் 9 பெண்கள், ஒரு ஆண் ஆகும். இந்த சீன மாணவர்களுக்கு தமிழ் கற்றுத்தர இருப்பவரும் ஒரு சீன பெண்தான், அவர் பெயர் ஃப்யூ பே லின். இவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு தமிழை கற்றுக்கொள்ள தொடங்கினாராம். தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள் இவருக்கு சுலபம் என்று பெருமையாக சொல்கிறார். இந்தியாவில் இருக்கும் மொழிகளான ஹிந்தி, வங்க மொழிக்கு அடுத்து தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

முதன் முதலில் தமிழ் எழுத்துக்களை பார்க்கும் போதே அந்த மொழியின் மீது ஒரு காதல் வந்துவிட்டது. தொடக்கத்தில் தமிழ் மொழி கடினமாகத்தான் இருந்தது. பின்னர், அதன் அர்த்தங்கள் விளங்கிக்கொள்ள ஆரம்பித்தவுடன் எனக்கு மிகவும் பிடிக்க தொடங்கிவிட்டது. என்னுடைய மாணவர்களுக்கும் அதை நல்ல முறையில் கற்றுத்தருவேன்.மேலும், இந்த பாடத்தின் ஒருபகுதியாக மூன்றாம் ஆண்டில் தமிழகத்திற்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துவந்து அந்த சுற்றுலாவின் மூலம் தமிழ் மக்கள் மற்றும் அவர்களின் உயரிய கலாச்சாரம் குறித்தும் எங்கள் மாணவர்களுக்கு கற்றுத்தர உள்ளோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்     


 

சார்ந்த செய்திகள்