Skip to main content

''இது அமெரிக்காவின் நாள்;இது ஜனநாயகத்தின் நாள்''-பதவியேற்றார் ஜோ பைடன்!  

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

'' This is America's Day: This is Democracy Day '' - Joe Biden takes office!

 

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் இன்று பதவி ஏற்றார். 78 வயதாகும் ஜோபைடன் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபர் என்பது பெருமைக்குரியவர். அதேபோல் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸும் துணை அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோரும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். 

 

306 பிரதிநிதிகள் வாக்குகளை பெற்று அதிபர் மாளிகையில் அடியெடுத்து வைத்துள்ளார் ஜோபைடன். அவருக்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல் அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அதிலும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

 

'' This is America's Day: This is Democracy Day '' - Joe Biden takes office!

 

கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் பதவியேற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  ஜோ பைடன்  1942 ஆம் ஆண்டு பென்சில்வேனியாவில் எளிய குடும்பத்தில் மூத்த பிள்ளையாக பிறந்தவர். சிறுவயதில் திக்கித்திக்கி பேசக் கூடியவராக இருந்த அவர் நீண்ட கவிதைகள், கட்டுரைகள் படித்து மாற்றிக்கொண்டார்.

 

பதவியேற்பு விழாவில் பேசிய ஜோ பைடன், இது அமெரிக்காவின் நாள். இது ஜனநாயகத்தின் நாள். அமெரிக்க அதிபரின் பணியை நான் உண்மையாக நிறைவேற்றுவேன். அரசமைப்பை பாதுகாக்க என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன். ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கும் நான் அதிபராக இருப்பேன். அமெரிக்க மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது. பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகள் வலுவானவை. ஆனால் அவை புதியவை அல்ல. வரலாறு, உண்மை, நம்பிக்கை ஆகியவை ஒற்றுமைக்கான வழிகளை காட்டுகின்றன. உள்நாட்டு பயங்கரவாதம், வெள்ளை இனவாதம் உள்ளிட்டவற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நாட்டை ஒன்றிணைக்க ஒட்டுமொத்த மக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். பெருந்தொற்று, வன்முறைகள் போன்றவையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமையுடன் இருந்தால் எந்த காலத்திலும் நாம் தோற்க மாட்டோம். ஒற்றுமை இல்லாமல் அமைதி நிலைக்காது என நாடாளுமன்றக் கட்டடத் தின் முன் உறுதிமொழி எடுத்து பொறுப்பேற்றுக் கொண்டார். 

 

கரோனா காரணமாக மாதிரி தனிமனித இடைவெளியுடன் சுமார் 200 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்