அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஃபோர்ட்நைட் கேம் உலக சாம்பியன் போட்டியில் கைல் என்ற 16 வயது சிறுவன் 20 கோடி ரூபாய் பரிசு வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஃபோர்ட்நைட் கேம் உலக அளவில் மிக பிரபலமானது. இந்த விளையாட்டை கோடிக்கணக்கான மக்கள் ஆன்லைனில் விளையாடி வந்தனர். எனவே இதற்கென ஒரு உலகக்கோப்பை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதும் உலகம் முழுவதிலுமிருந்து 30 க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த 40 கோடி பேர் இதில் பங்கேற்க விண்ணப்பித்தனர்.
இதன் இறுதி போட்டி நேற்று நியூயார்க் நகரில் நடந்தது. இதில் கைல் என்ற 16 வயது சிறுவன் அனைவரையும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 6 பிரிவுகளாக நடைபெற்ற இந்த கேமில் சாம்பியன் பட்டம் வென்ற சிறுவன் 3 மில்லியன் டாலரை பரிசாக பெற்றுள்ளான். இன்று வரை உலக அளவில் அதிக பணம் செலவு செய்யப்பட்ட கேமிங் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.