
97 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் தொடங்கியது. அமரிக்கா லாஸ் ஏஞ்சலில் இதற்கான கொண்டாட்டம் தொடங்கியுள்ள நிலையில் உலக அளவில் பல நாடுகளில் இருந்தும் நடிகர் நடிகைகள் மற்றும் திரைத்துறை கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் 'The Real Pain' என்ற படத்திற்காக கிரான் குல்கினுக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது 'Flow' திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அனிமேஷன் குறும்பட விருது 'In The Shadow Of The Cypress' படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு என இரு ஆஸ்கார் விருதுகளை 'ANORA படத்திற்காக ஷான் பேகர் பெற்றுள்ளார். சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருது 'THE SUBSTANCE' படத்திற்கு கிடைத்துள்ளது. 'WICKED' படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை பால் டேஸ்வெல் வென்றுள்ளார். அதே படத்திற்கு சிறந்த கலை இயக்கத்திற்கான விருதை நாதன் க்ரோலி, லீ சாண்டலிஸ் பெற்றனர். 'எமிலியா பிரஸ்' படத்திற்கான சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை ஸோயி சல்தானா பெற்றுள்ளார். சிறந்த தழுவல் கதைக்கான ஆஸ்கர் விருதை 'CONCLAVE' படத்திற்காக பீட்டர் ஸ்டாராகன் பெற்றுள்ளார். சிறந்த ஆவணப்படமாக 'நோ அதர் லேண்ட்' திரைப்படம் விருது பெற்றுள்ளது.