Skip to main content

விதிமீறும் டி.டி.எஃப் வாசன்; நடவடிக்கை எடுக்குமா காவல்துறை? - இணையவாசிகள் கேள்வி

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

youtuber ttf vasan bike issue viral with his girl friend 

 

விலை உயர்ந்த அதிக சிசி திறன் கொண்ட பைக்குகளை வைத்து சாலைகளில் சாகசம் செய்து அதனை வீடியோவாக யூடியூப்பில் வெளியிட்டு வருபவர் டி.டி.எஃப் வாசன். பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவ மாணவியர் வரை இளைய தலைமுறையினரில், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து அதிவேகமாக பைக்குகளை இயக்குதல், சாலை விதிகளை மதிக்காதது போன்ற சம்பவங்களால் இவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் ஜி.பி.முத்துவை பைக்கில் உட்கார வைத்து அதிவேகமாக பைக்கை ஒட்டி அவரை பயமுறுத்தும் விதமாகவும், சாலையில் செல்வோரையும் அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில், இவர் தனது தோழியுடன் பைக்கில் சென்னை - திருத்தணி நெடுஞ்சாலையில் செல்லும் போது இரு கைகளையும் வண்டியில் இருந்து விட்டுவிட்டு தனது தோளில் மாட்டி இருந்த பையில் இருந்த பொருள் ஒன்றை எடுத்து தனது பைக்கின் பின்புறத்தில் அமர்ந்து இருக்கும் தனது தோழிடம் கொடுக்கிறார். இதனை வீடியோவாகவும் எடுத்துப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைக் கவனித்த நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதுபோன்று தொடர்ந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு வரும் டி.டி.எஃப் வாசனை போலீசார் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

 

சாலையில் பயணம் செய்பவர்களுக்கு பயத்தை உண்டாக்குவது, இளைஞர்களைத் தவறாக வழிநடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் பைக்குகளை அதிவேகமாக இயக்குபவர்கள் மீது கடுமையான சட்ட விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் இணையவாசிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்