அரியலூர் மாவட்டம் நல்லரிக்கையைச் சேர்ந்த ஐயப்பன், நம்மங்குணம் தர்மலிங்கம், விழுப்புரம் மாவட்டம் திரிவிடபுரம் மணிகண்டன் ஆகிய மூவரும் நாட்டுத் துப்பாக்கிகளோடு கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகேயுள்ள நாங்கூர் வனக் காட்டுக்குள் இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக விலங்குகளை வேட்டையாட சென்றுள்ளனர்.

இதில் துப்பாக்கியால் சுடும்போது ஐயப்பன் உடலில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த விஷயத்தை மூடி மறைத்துள்ளனர் மேற்ப்படி மூவரும். மருத்துவமனை டாக்டர்கள் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராமநத்தம் போலிசார் தர்மலிங்கம் மணிகண்டன் ஆகியோரை தேடி கண்டு பிடித்து துப்பாக்கை பறிமுதல் செய்ததோடு எப்படி குண்டு வெடித்தது என தீவிர விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.
இந்த காட்டில் மான் - முயல் காட்டு பன்றி போன்ற விலங்குகள் உள்ளன. அவைகளை வேட்டையாட பல மாவட்டங்களில் இருந்து அவ்வப்போது வந்து திருட்டுதனமாக வேட்டையாடி செல்கின்றனர். சிலர் மாட்டிக் கொள்கிறார்கள். பலர் மாட்டுவதில்லை. வனத்துறை கோட்டைவிடுகிறதா? குறட்டை விடுகிறதா? என்கிறார்கள் அப்பகுதிமக்கள்.