Skip to main content

சாக்கடையில் துப்பாக்கி... கத்தி எங்கே? வில்சன் கொலையில் முன்னேறும் போலீசார்!!

Published on 23/01/2020 | Edited on 24/01/2020

சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்  கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கழிவுநீர் ஓடையிலிருந்து கைப்பற்றிய போலீசார் கத்தியை தேடி முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

r1



கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் இரவுப்பணியில் இருந்த  சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் கடந்த எட்டாம் தேதியன்று கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார்.

 

Wilson's case in progress!

 

இந்தியளவிலும்  குறிப்பாக போலீசார் மத்தியிலும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய படுகொலையில் சம்பவத்தன்று தங்களுக்கு கிடைத்த தடயங்களின் அடிப்படையிலும் சிசிடிவி காட்சிகளின் படியும் கொலையாளிகளைத் தேடிவந்த நிலையில் கேரளா மாநிலம் திருவிதாங்கோட்டு அப்துல் சமீம், கோட்டாறு தவுபிக் ஆகியோர் கொலையாளிகள் என்பது நிரூபணமானது.

r2


இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலப் போலீசார் இணைந்து விசாரணையையும், தேடுதல் வேட்டையையும் நடத்திய பொழுது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் இஜாஜ் பாட்சா  சிக்கினார். மேற்கண்ட இவரிடமிருந்து வெளிநாட்டு வகை துப்பாக்கி பெற்று சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்படட்டார் என உறுதியான நிலையில் தலைமறைவு குற்றவாளிகள் இருவரும் உடுப்பி ரயில் நிலையத்தில் போலீசாரிடம் சிக்கினர்.

 

வழக்கு விசாரணைக்காக தடுப்புக் காவலிலுள்ள குற்றவாளிகளான அப்துல் சமீம் , தவுபிக் ஆகியோர் தொடர்ந்து விசாரிக்கப்பட்ட நிலையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் கொலைக்கு தாங்கள் பயன்படுத்திய துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவு நீர் ஓடையில் வீசியதாக அடையாளம் காண்பிக்க இன்று துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கொண்டு கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்