Published on 17/08/2021 | Edited on 17/08/2021
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, "தமிழக அரசு பெட்ரோல் விலையைக் குறைந்துள்ளது. இது சந்தோஷமான செய்தி. அதே நேரத்தில் டீசல் விலையையும் குறைத்திருக்கலாம்" என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பிடிஆர், "விவசாயிகள், மீனவர்கள், போக்குவரத்து துறை மற்றும் தனியார் தரப்பு வைத்துள்ள பெரிய வாகனங்கள் என இவை அனைத்தும் டீசலில் இயங்குகிறது. அதே நேரத்தில், 2 கோடி பேர் இரண்டு சக்கர வாகனங்களை தமிழகத்தில் பயன்படுத்துகிறார்கள். மேலும் மீனவர்கள், விவசாயிகளுக்கு அரசு டீசல் மானியம் வழங்குகிறது. மேலும் ஆல் இந்தியா பெர்மிட் வைத்திருப்பவர்கள் இதனைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே அனைத்தையும் கலந்தாலோசித்தே, பெட்ரோல் மீதான வரியை அரசு குறைந்தது" என்றார்.