Skip to main content

சீமானின் 40 நிமிட உரையாடல்; ரஜினியின் பதில் என்ன? - பின்னணியைப் பகிர்ந்த தமிழா தமிழா பாண்டியன்

Published on 27/11/2024 | Edited on 27/11/2024
Tamizha Tamizha Pandian Interview

‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் கலந்துகொண்டு அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் நம்மிடம் பகிர்ந்துவருகின்றனர். அந்த வகையில் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், அண்மையில் நடந்த ரஜினிகாந்த் - சீமான் சந்திப்பு குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ரஜினியை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் அவரை சசிகலாவும் பார்த்தான் செய்தார். சசிகலா முதலமைச்சர் ஆகப் போகிறார் என்பதற்காகவா ரஜினி அவரை சந்தித்தார். பி.ஆர்.ஓ-க்கள் சசிகலா பார்க்க வேண்டுமென்று ரஜினியிடம் சொல்லியிருப்பார்கள். ஏன் அந்த அம்மாவை பகைத்துக்கொள்ள வேண்டுமென்று ரஜினியும் பார்க்க ஒப்புக்கொண்டிருப்பார். சீமான் கதையும் இதே தான். ரஜினி காந்த் அறிவிக்கப்படாத தி.மு.க. உறுப்பினர்தான். தி.மு.க.-வை அவர் பகைத்துக்கொள்ளத் தயாராக இல்லை. ஏனென்றால் அவருக்கும் தி.மு.க. கட்டுக்கும் இடையே பெரிய நட்பு இருக்கிறது.

ராகவேந்திரா கல்யாண மண்டபம் தி.மு.க. இல்லையென்றால் அவர் கையைவிட்டுப் போயிருக்கும். முன்பு அந்த மண்டபத்தைப் போலி டாக்குமெண்ட் மூலம் ரஜினிகாந்த்திடம் விற்றுவிட்டுப் போய்விட்டார்கள். அதன் பிறகு ஒரிஜினல் டாக்குமெண்ட் வைத்திருப்பவர் நீதிமன்றம் சென்று விட்டார். மண்டபம் கையைவிட்டுப் போகும் சூழலுக்கு வந்தது. அதன் பிறகு கலைஞர் சமாதானம் பேசி அந்த மண்டபத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவினார். அதனால் ரஜினி எந்த காலத்திலும் தி.மு.க. குடும்பத்திற்கு விஸ்வாசமாக இருப்பார்.

சமீபத்தில் நடந்த கலைஞர் எனும் தாய் நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி கிடைக்க வேண்டுமென்று, சீனியர், ஜூனியர் என்று அமைச்சர் துரை முருகனை வைத்துப் பேசியிருந்தார். அறிவாலய மேடையில் முதல்வர் அனுமதியுடன் துரைமுருகனை விமர்சிக்க ரஜினிக்கு இடம் கிடைக்கிறதென்றால் அவருக்கும் அரசியல் பின்னணி இருப்பதால்தான். அந்த அரசியல் பின்னணி ரஜினிக்கு தி.மு.க. கட்சிதான். த.வெ.க. மாநாடு முடிந்ததிலிருந்து சீமான் விடாமல் 15 நாட்களாக ரஜினியை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கிறார். தி.மு.க. அனுமதி கொடுத்த பிறகு ரஜினி சீமானை வரச்சொல்லி சந்தித்திருக்கிறார். ஆனால், சீமானின் எந்த கோரிக்கைக்கும் ஆமா, இல்லை என்று ரஜினி பதிலளிக்கவில்லை.

சீமான் சொல்வதை 40 நிமிடம் காதில் மட்டும் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். அது வெறும் மரியாதை நிமித்தம் நடந்த சந்திப்புதான். ரஜினிகாந்த் என்ன தமிழ்த்தேசிய அரசிலா செய்யப் போகிறார்? அல்லது விடுதலைப் புலிகள் அரசியல் பண்ணப் போகிறாரா? அல்லது தி.மு.க. எதிர்ப்பு அரசியலா செய்ய முடியுமா? இந்த மூன்றும்தான் சீமானுடைய அரசியல். ஆனால் இது ரஜினிக்கு வேப்பங் காய். அப்படியென்றால் ஏன் இந்த சந்திப்பு என்ற கேள்வி எழும். நா.த.க. கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் வெளியேறி வருவதால் அவர்களைத் தக்கவைக்க சீமான் போட்ட பில்டப் தான் இந்த ரஜினிகாந்த் உடனான சந்திப்பு. சினிமாவில் ஒரு நடிகருக்கு வாய்ப்பு இல்லாத நேரத்தில் எதாவது நிகழ்ச்சிக்குச் சென்றால் பத்து பதினைந்து பவுன்சர்களை வைத்து சீன் போடுவார். அதுபோலத்தான் சீமானுடைய நிலைமையும் இருக்கிறது என்றார்.