சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி கனகா(83). இவர்களது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வந்த நிலையில் அவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர். அதனால் கனகா மட்டும் தனி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கனகா வீட்டில் உடல் கருகி பிணமாகக் கிடந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்பு நடத்திய விசாரணையில் நேற்று முன் தினம் கனகா வீட்டில் உள்ள பூஜை அறையில் சாமி கும்பிடுவதற்காக விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கனகாவின் சேலையில் தீப்பிடித்த நிலையில் தீ உடல் முழுவதும் பரவி சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.