Skip to main content

உதித்சூரியா தந்தைக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி கடும் எதிர்ப்பு!!

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த உதித் சூர்யா மற்றும் பிரவீன், ராகுல் இவர்களது தந்தையான வெங்கடேசன், சரவணன், டேவிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 

neet issue



அதுபோல் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவன் இர்பான் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை வருகிற ஒன்பதாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அவரது தந்தை முகமது சபியிடம் போலீசார் சில நாட்களாக விசாரணை நடத்தியதில் அவர் போலி டாக்டர் என தெரியவந்தது அவரையும் போலீசார் தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சில தினங்களுக்கு முன்பு மதுரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய புரோக்கரான பெங்களூரை சேர்ந்த முகமது ரஷீத். சென்னையை சேர்ந்த வேதாசலம் ஆகியோரை பிடிக்க சிபிசிஐடியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

மாணவர்கள் உதித்சூரியாமற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டாக்டர் வெங்கடேசன் தனக்கு ஜாமீன் வழங்க கோரி தேனி கோர்ட்டில் மனு அளித்திருந்தார் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது அப்பொழுது டாக்டர் வெங்கடேசன் தரப்பில் ஆஜரான வக்கீல் முத்துச்செல்வம் டாக்டர் வெங்கடேசன் சிறுநீரக பாதிப்பால் மருந்துகள் சாப்பிட்டு வருகிறார் எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆனால் சிபிசிஐடி சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் நிர்மலாதேவி கூறுகையில் சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணையில் இருப்பதால் வழக்கின் இரண்டாவது நபரான வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்க கூடாது. அவ்வாறு வழங்கினால் ஆவணங்களை மாற்ற வாய்ப்பு உள்ளது. அவர் நன்றாக உணவு சாப்பிட்டு கொண்டு வருகிறார் எனவே உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் வழங்க கூடாது என்றார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சோபனா விசாரணையை வருகிற 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார் இதனையடுத்து சிறையிலுள்ள மாணவர்கள் பிரவீன், ராகுல் அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகிய 4 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி ரூபனா தாமதமாக மனு தாக்கல் செய்ததால் விசாரணைக்கு எடுக்க முடியாது மீண்டும் நாளை மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் நாலுபேரும் ஜாமீன் கேட்டு தனித்தனியாக மனு தாக்கல்  செய்துள்ளனர்.
 

neet issue



இந்த மனுவை வருகிற 10ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார் மேலும் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சித்ராதேவி அரசு உதவி வக்கீல் நிர்மலாதேவி சார்பில் சேலம் சிறையில் உள்ள மாணவர் இர்பானை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சேலம் நீதிமன்றத்தில் இருந்து வழக்கு குறித்து ஆவணம் கிடைத்த பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இப்படி நீட் தேர்வு மூலம் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்கள் மற்றும் தந்தைகள் ஆறு பேருமே ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்