கடந்த 2022 ஆம் ஆண்டு டெல்லி திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவந்த தனது காதலியை 35 துண்டுகளாகக் காதலன் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது, இதே போன்ற ஒரு சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அரங்கேறியுள்ளது.
ஜார்கண்டின் குந்தி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா(25). இவர் தமிழகத்தில் உள்ள ஒரு கசாப்புக் கடையில் வேலைபார்த்து வந்தார். நரேஷ் பெங்ரா தனது குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளாமல்(லிவ்இன் ரிலேசன்ஷிப்) சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்ற நரேஷ் பெங்ரா, அங்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்த நரேஷ் பெங்ரா, தனக்கு திருமணமானதை மறைத்து இந்த பெண்ணுடன் லிவ்இன் உறவை தொடர்ந்துள்ளார்.
இந்த சூழலில் அண்மையில் அந்த பெண் நரேஷின் சொந்த ஊருக்கு செல்வோம் என்று கூறியிருக்கிறார். ஆனால், நரேஷ் அதனை மறுத்து வந்துள்ளார். ஆனால் லிவ் இன் உறவிலிருந்த பெண் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், நரேஷ் அவரை அழைத்துக் கொண்டு, ஜார்க்கண்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு ரயில் மூலம் சென்றுள்ளார். அங்கிருந்து ரிக்ஷா மூலம் தனது சொந்த ஊருக்கு அழைத்து சென்றவர், வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வண்டியை நிறுத்தியுள்ளார். பின்பு அந்த பெண்ணை அந்த இடத்திலேயே நிற்க வைத்துவிட்டு, வீட்டின் அருகே சென்று கொலை செய்வதற்கு தேவையான ஆயுதங்களை எடுத்து வந்துள்ளார்.
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்ற நரேஷ், அந்த பெண்ணை வன்கொடுமை செய்து பின்னர் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அந்த பெண் துடிதுடித்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு பெண்ணின் உடலை 50 துண்டுகளாக வெட்டி காட்டில் உள்ள விலங்குகளுக்கு இரையாக்கிவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி அந்த பகுதியில் தெரு நாய் ஒன்று மனித உடல் பாகத்தை வாயில் கவ்விக்கொண்டு வந்துள்ளது. சந்தேகமடைந்த அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காட்டுப் பகுதியைச் சோதனை செய்தனர். அதில் மீதமுள்ள உடல்பாகங்கள் கிடைத்துள்ளது. கிடைத்த பாகங்களை வைத்து போலீசார் விசாரணை செய்ததில், அது நரேஷுடன் இல் இன் உறவில் இருந்த பெண் என்றும், அவரி நரேஷே 50 துண்டுகளாக வெட்டிக்கொன்றது தெரியவந்தது. இதனை அவருமே ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இந்த உடல் பாகம் தனது பெண்ணுடன் தான் என்று அவரது தாயார் உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நரேஷ் பெங்ரா மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.