Skip to main content

''தயவு செஞ்சு பஸ்ல படிக்கட்டில் நிற்காதிங்கப்பா...''-மாணவர்கள் முன் மண்டியிட்டு கதறி அழுத தந்தை

Published on 28/11/2024 | Edited on 28/11/2024
 "Please don't stand on the bus steps " - the father tearfully requested in front of the students

வடகிழக்கு பருவமழை காரணமாக தற்பொழுது தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் கடலூரில் கடந்த 26 ஆம் தேதி பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டதால் பள்ளி மாணவர்கள் மாலை துரிதமாக வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது மழை காரணமாக பல மாணவர்கள் அவசரமாக வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய முயன்றனர்.

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த 11 ஆம் வகுப்பு மாணவன் கைலாஷ் தேவனாம்பட்டினம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி உள்ளார். படியில் நின்றிருந்த மாணவன் கைலாஷ் தவறி கீழே விழுந்த நிலையில் பேருந்தின் பின் சக்கரம் தலைமீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக உடல் மீட்கப்பட்டுகடலூர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.மகனின் மரணச் செய்தியைக் கேட்டு அவருடைய பெற்றோர்களும் உறவினர்களும் கடலூர் அரசு மருத்துவமனை முன்பு கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

bus

 

இந்நிலையில் மாணவன் கைலாஷ் பயின்று வந்த பள்ளியில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் உயிரிழந்த மாணவனின் தந்தை கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களிடம் கைகூப்பி கதறி அழுத அவருடைய தந்தை 'பசங்களா தயவு செஞ்சு படியில் நிக்காம உள்ள போயிடுங்க... என் புள்ள போய்ட்டான் பா. எப்ப பஸ்ஸில் ஏறினாலும் படிக்கட்டில் நிற்காதிங்கப்பா. உங்க கால்ல விழுந்து கேட்கிறேன்பா' என கண்ணீருடன் அழுதோடு, திடீரென தரையில் மண்டியிட்டு கண்ணீர் விட்டு தனது கோரிக்கையை வெளிப்படுத்தினார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்த போலீசார் அவரை தேற்றி ஆறுதல் படுத்தினர்.

சார்ந்த செய்திகள்