ஜல்லிக்கட்டை போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் வெற்றி பெறுவோம் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், மத்தய அரசு எந்த வாதத்தையும் உச்சநீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டும். ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும்.
ஆனால் அரசின் சார்பாகவும், அதிமுக சார்பாகவும் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் மாற்றாமல் அதிகப்படியான அழுத்தத்தை கொடுத்து வருகிறோம். எப்படி ஜல்லிக்கட்டில் தமிழக உணர்வு போராட்டத்தில் வெற்றி பெற்றோமோ, அதேபோல் தமிழர்களின் உரிமை போராட்டமான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத வரை இந்த அரசு ஓயாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.