
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைச் சந்தல் காட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவர் கார் ஓட்டுநராக உள்ளார். சம்பதன்று இவரது வீட்டில் புகுந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல், வீட்டில் இரவு தூங்கிக்கொண்டிருந்தவர்களை கட்டிப்போட்டு தாக்கியுள்ளனர்.
சரமாரியாக தாக்கிய அவர்களை, நகை பணம் எங்குள்ளது என்று கேட்டுள்ளனர். பின்னர் மூன்றரை பவுன் நகை, 60 ஆயிரம் ரொக்கம் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மர்ம கும்பலால் தாக்கப்பட்டு மண்டை உடைந்த இருவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கச்சிராயப்பாளையம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.