Published on 09/12/2019 | Edited on 09/12/2019
மதுரையில் துக்ளக் வார இதழின் ஆண்டு விழாவில் பேசிய, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, "திராவிட பாரம்பரியம் தமிழகத்தில் இல்லை; வெறும் பெயரளவில் அரசியலில் மட்டுமே இருக்கிறது. தமிழகத்தை மாற்றிய பெருமை எம்ஜிஆருக்கு தான் உண்டு; கோயிலுக்கு செல்வதாக அறிவித்துவிட்டுச் சென்றார்.
தமிழக மக்களைப் போல் நல்லவர்கள் கிடையாது என்பது அகில இந்திய அளவுகோல். இந்தியாவை தலைமை தாங்கக் கூடிய அளவுக்கு தமிழக கலாச்சாரத்தை மாற்ற வேண்டும். தமிழகத்தை 70 ஆண்டுகளாக பாழ்படுத்தியது இரண்டு கழகங்கள் தான். திராவிட கலாச்சாரத்தை தமிழகம் அறவே ஒதுக்கிவிட்டது. தமிழகத்தில் ஆன்மீகம், அரசியல்,கலாச்சாரம், பண்பாட்டு நோய் உள்ளது. மரியாதையை குறைத்து உரிமையை அதிகரிக்க வேண்டுமென பேசுவதால் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு". இவ்வாறு குருமூர்த்தி பேசினார்.