Skip to main content

வேலூர் கோட்டையில் காதலர்களை விரட்டிய துப்பாக்கி ஏந்திய போலீசார்!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் மூன்றாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
 

அதேபோல் மாவட்டம் முழுவதும் 8 ந்தேதி வரை வரை பொதுக்கூட்டம் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது காவல்துறை. அத்துடன் சாலையில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் அதிகாரிகள்.

vellore castle lovers not allowed for yesterday police protection high


வேலூர் கோட்டையில் உள்ள மசூதியில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டது. இதற்காக கோட்டை முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர், அங்குள்ள மசூதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோட்டைக்குள் யார் சென்றாலும் நிறுத்தி அவர்களை விசாரித்த பின்பே அனுப்பினர். கோட்டைக்குள் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. 


காதல் ஜோடிகள் புகலிடம் கோட்டை தான். காதல் ஜோடிகள் பலரும் அங்கு வந்தனர். அவர்களை உள்ளே அனுப்பாமல் போலீசார் திருப்பி அனுப்பியனர். எங்களால் என்ன பிரச்சனை வந்துவிடப்போகிறது என புலம்பியபடியே சென்றனர் காதலர்கள். 
 

தங்கள் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் யாராவது நடமாட்டமிருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு எஸ்பி பிரவேஷ்குமார் கூறியுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்