Skip to main content

வி.சி.க. மற்றும் இந்து மக்கள் கட்சி மோதிக்கொள்ளும் சூழல்; நாகையில் பரபரப்பு

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

V.C.K. And Hinduism party conflict in Nagai

 

நாகை அடுத்த நாகூர் பகுதியைச் சேர்ந்த இந்து அமைப்பின் நிர்வாகி தங்கமுத்துகிருஷ்ணன் என்பவரது மனைவி தங்கம் அம்மாள் கடந்த 1995 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது நினைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிவசேனா, இந்து மக்கள் கட்சி, இந்து தேசிய கட்சி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் பங்கேற்றனர். 

 

கூட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து தவறாக, தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த நூற்றுக்கணக்கான வி.சி.க.வினர் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியை நோக்கித் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் திரண்டு இருதரப்பினரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது.

 

பின்னர் அர்ஜுன் சம்பத் அங்கிருந்து புறப்பட்ட நிலையில், வி.சி.க.வினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நாகை எஸ்.பி. ஹர்ஷிங் தலைமையில் ஏராளமான அதிவிரைவுப்படை போலீசார் குவிந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்கூட்டம் நடந்த சிவன் தெற்கு வீதி, பெருமாள் கீழ வீதி, பிடாரி கோவில் தெரு வழியாக எஸ்.பி. ஹர்ஷிங் தலைமையில் அணிவகுத்து சென்ற போலீசார் கூட்டம் கூடாமல் அங்கிருந்த இரண்டு அமைப்பைச் சேர்ந்தவர்களையும் வெளியேற்றினர். 

 

V.C.K. And Hinduism party conflict in Nagai

 

அதனைத் தொடர்ந்து வி.சி.க. நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் வி.சி.க.வினர் நாகை எஸ்.பி. ஹர்ஷிங்கை நேரில் சந்தித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். நாகையில் வி.சி.க., இந்து மக்கள் கட்சியினர் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகி காவல்துறையினர் குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.