Skip to main content

விமானத்தில் கடத்தப்படும் ஆமைகள் !

Published on 24/11/2019 | Edited on 25/11/2019

இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று திருச்சி வந்தது இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 பயணிகள் தாங்கள் எடுத்து வந்த உடமைகளில் ஆமைகளை மறைத்து எடுத்து வந்ததை கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கும் முயற்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வெளிநாட்டில் இருந்து ஆமைகளை கடத்தி வந்த இரு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Turtles transported by plane!

 

மருந்துகள், உணவு உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்காக ஆமை இனங்கள் கடத்தப்படுகின்றன. சில வீடுகளில் ஆமைகள் செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் ஆமைகள் நல்ல விலை போவதால் ஆமை இனங்களின் கடத்தல் வணிகம் அதிகரித்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில் தொடர்ச்சியாக தங்கம் கடத்தம்ப்படும் நிலையில் தற்போது ஆமைகள் அதிகமாக கடத்தப்பட்டு வருது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Cm MK Stalin announcement for Library in the name of the kalaiganr in Trichy 

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர், “தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேறியுள்ளது. மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

Next Story

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
chennai airport unknown person email related issue

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு  நள்ளிரவில் இ - மெயில் ஒன்று வந்துள்ளது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் குழு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனைக்குப் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் எனத் தெரியவந்தது. சென்னை விமான நிலையத்திற்குக் கடந்த 2 வாரத்தில் 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் இதுவாகும். இந்த வெடிகுண்டு புரளியைக் கிளப்பும் மர்ம நபர்கள் குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு நேற்று (16.06.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தின் பயணிகள் தங்கும் அறைகள், தண்டவாளங்கள், ரயில்வே நடைமேடைகள், பயணிகள் பொருட்கள் வைக்கும் இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக திருநெல்வேலியின் பல்வேறு பொது இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதே சமயம் இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான விசாரணையில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சிவபெருமாள் (வயது 42) என்பவரை நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.