Skip to main content

புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாட்களில் ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார இரயில்கள் - தெற்கு இரயில்வே

Published on 01/01/2019 | Edited on 01/01/2019

 

r

 

 

புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாட்களில் ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார இரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர், வேளச்சேரி, அரக்கோணம் ஆகிய மார்க்கங்களில் வாரநாட்களில் இயக்கப்படும் இரயில்களின் எண்ணிக்கையைவிட, பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலங்கள் விடுமுறை நாட்களான ஞாயிறு அன்று குறைவான எண்ணிக்கையிலே இரயில்கள் இயக்கப்படும். அரசு விடுமுறைகளின் போதும், ஞாயிறு அட்டவணைப்படியே புறநகர் மின்சார இரயில்கள் இயக்கப்படு வருகின்றன. இந்நிலையில், ஆங்கில புத்தாண்டான இன்று, பொங்கல் பண்டிகை, குடியரசு தின விழா போன்ற விடுமுறை நாட்களிலும் ஞாயிறு கால அட்டவணைப்படியே இரயில்கள் இயக்கப்படுமென தெற்கு இரயில்வே செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரயில் பயணிகளுக்கு மிரட்டல்; மேலும் 2 பேர் கைது!

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
chennai central to alappuzha expresstrain incident 

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு கடந்த 25 ஆம் தேதி இரவு விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை அடைந்ததும் மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள் முன்பதிவு பெட்டியில் ஏறியுள்ளனர். இந்த இளைஞர் ரயிலில் புகைப் பிடித்தபடியும், சத்தமாகப் பாட்டு படியபடியும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் அதிருப்தி அடைந்த ரயில் பயணிகள் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் இது தொடர்பாக தட்டிக்கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர்கள் பதிலுக்குப் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பயணிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் பெண் பயணி ஒருவரிடம் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். இதனையடுத்து திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்று விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து பெண் பயணியைத் தரக்குறைவாகப் பேசி, இளைஞர்கள் தாக்கிய வீடியோ வெளியானதை அடுத்து போலீசார் இது தொடர்பாக 17 வயது சிறுவன் மற்றும் அசோக் குமார் (வயது 20) என்ற இருவரைக் கைது செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சுடலைராஜ் மற்றும் கரண் என மேலும் 2 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்; ரயில்வே புதிய விளக்கம்!

Published on 10/05/2024 | Edited on 10/05/2024
southern railway description about pregnant woman falling in train incident 

சென்னையில் இருந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வளைகாப்பிற்காக கடந்த வாரம் கொல்லம் விரைவு ரயிலில் சென்னையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி கஸ்தூரி (வயது 21) என்ற பெண் பயணித்துள்ளார். இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் பயணித்த ரயில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சென்று கொண்டிருந்த போது கஸ்தூரிக்கு வாந்தி வந்ததால் காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது ரயிலில் இருந்து தவறி விழுந்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரது உறவினர்கள் ரயிலின் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்தபோது அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என்றும், இதனால் சுமார் 10 நிமிடங்கள் கழித்து 8 கி.மீ. தூரம் தள்ளிச் சென்று ரயில் நின்றது எனவும் கூறப்பட்டது. ரயில் நின்ற இடத்திலிருந்து பின்னோக்கி வந்து கர்ப்பிணியை அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். அதன் பின்னர் சுமார் 2 மணி நேர தேடலுக்குப் பின் உளுந்தூர்பேட்டை அருகே கர்ப்பிணி கஸ்தூரி சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 5 ஆம் தேதி (05.05.2024) வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழந்தது அவரது உறவினர்களிடம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் ரயிலில் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

southern railway description about pregnant woman falling in train incident

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து தெற்கு ரயில்வே சார்பில் விளக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், “கர்ப்பிணி பெண் பயணித்த கொல்லம் ரயிலில் உள்ள 17 பெட்டிகளையும் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் அனைத்து அபாய சங்கிலிகளும் வேலை செய்துள்ளது. ஆகவே விரைவு ரயிலில் கர்ப்பிணி பயணித்த எஸ் 9 உட்பட அனைத்து பெட்டிகளிலும் அபாய சங்கிலி செயல்படும் நிலையிலேயே இருந்ததுள்ளது என்பதை ஆய்வு குழுவினர் உறுதி செய்துள்ளனர். சம்பவம் நிகழ்ந்த போது அபாய சங்கிலியை முறையான அழுத்தத்துடன் இழுத்திருந்தால் ரயில் நின்றிருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.