puthuvai

புதுச்சேரி மாநிலத்திற்கான உள்ளாட்சி தேர்தல்களை வருகிற 26-ஆம் தேதி நடக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்க கோரி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

உள்ளாட்சி கூட்டமைப்பு மற்றும் சமூக சனநாயக இயக்கங்கள் ஒன்றிணைந்து புதுவை தலைமை அஞ்சலகம் எதிரே நடத்திய மணி அடிக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சி கூட்டமைப்பு தலைவர் ஜெகன்னாதன் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலை கழகம் லோகு.அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கம் அழகிரி, தமிழர் களம் அழகர், மக்கள் உரிமை கூட்டமைப்பு கோ.சுகுமாறன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் சந்திரசேகரன், அம்பேத்கார் தொண்டர் படை பாவாடைராயன், மக்கள் மன்றம் நாராயணசாமி, பூர்வீக குடிமக்கள் பேரவை ரகுபதி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

Advertisment