8 வழிச்சாலையினால் விவசாயிகள் பெரும் பாதிப்படைவதால் போராட்டம் நடக்கிறது. அதனால் இவர்கள் என்ன சமூக விரோதிகளா? என அமுமுகவின் துணைபொதுச் செயலாளார் டி.டி.வி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஐனநாயக நாட்டில் போராட்டம் என்பது அறவழியில் நடைபெறுகிறது. மகாத்மா காந்தியே அறவழி போராட்டம் நடத்தியவர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுகாதாரக் கேடு ஏற்படுவதால் போராட்டம் ஏற்பட்டது. 8 வழிச்சாலையினால் விவாசாயிகள் பாதிப்படைகிறார்கள் ஆதலால் போராட்டம் நடக்கிறது. அதனால் இவர்கள் என்ன சமூக விரோதிகளா? காவல் துறையினரை வைத்து அராஜகத்தை நடத்துகிறது இந்த அரசு.
மத்திய அராசாங்கம் தாய் கோழி குஞ்சை காப்பற்றுவது போல மாநில அரசை காப்பாற்றுகிறது. பெண் பக்திரிக்கையாளர்களை தரக் குறைவாக பேசுகிறார்கள். எங்கள் கட்சிக்காரரை தீவிரவாதி போல் கைது செய்கிறார்கள். எஸ்.வி.சேகரை கைது செய்ய பயப்படுகிறது.
8 வழிச்சாலை திட்டம் என்றால் என்ன என்பதை முதலில் நிலத்து சொந்தகாரர்களுக்கு எடுத்துரைக்கு வேண்டும் பின்பு அவர்களை பாதிக்கவில்லையென்றால் செயல்படுத்துங்கள் ஏன் இந்த அவசரம்? போராடுகிற மன்சூர் அலிகான் உட்பட வளர்மதி, பியூஸ் மனுஷ் போன்றவர்களை கைது செய்ததில் என்ன நியாயம் உள்ளது? குட்கா விஷயத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே என் கருத்து. இதை துரிதபடுத்துவதில் தவறு இல்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையிலும் தேவை. அது போல் இன்னும் ஒரு மாவட்டத்திற்க்கு வந்தாலும் நல்லது தான். எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் நான் நீதிமன்றத்தை நம்புகிறேன். கமலஹாசன் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்தை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. என்னை பற்றி ஆர்.கே.நகரில் தோற்று விடுவேன் என்றார். அது நடந்தா விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.