புதுக்கோட்டையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. இதில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பங்கீடு பற்றி முடிவெடுத்தக் கொள்வதாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் (பொ) திருமயம் ரகுபதி எம்.எல்.ஏ பேசும் போது..
உள்ளாட்சித் தேர்தலை ஏதாவது காரணம் சொல்லி தி.மு.க நீதிமன்றத்திற்கு சென்று நிறுத்தி விடுவார்கள் என்று அ.தி.மு.க நினைக்கிறது. அது நடக்காது. தி.மு.க உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது. அதாவது ஒரே தொகுதி தொடர்ந்து பொது தொகுதியாகவும், அதே போல தொடர்ந்து தனித் தொகுதிகளாகவும் உள்ளது. இதையெல்லாம் காரணம் காட்டி தி.மு.க கோர்ட்டுக்கு போகும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிச்சயமாக நாங்க போகமாட்டோம்.
அடுத்து மாவட்ட ஊராட்சி குழுவுக்கும் பிரிச்சாச்சு. ஆனால் இப்ப மாவட்டம் பிரிச்சாச்சு. அதன் பிறகு மறு சுழற்சி வரவேண்டும். இப்ப 32 மாவட்டம் பிறகு 37 மாவட்டமாகும். அதில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இதெல்லாம் வச்சு நீதிமன்றம் போக வைக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் போகமாட்டோம். தேர்தலைச் சந்திக்கும் தன்னம்பிக்கை எங்களிடம் உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். அதாவது கலைஞர் ஆட்சி காலத்தில் காவிரி- குண்டாறு- வைகை திட்டத்தை செயல்படுத்த சுமார் ரூ. 600 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாயனூரில் தடுப்பணையும் கட்டப்பட்டு ஆரம்ப கட்டப்பணிகள் நடந்துள்ளது. 2011 தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க ஆட்சி வந்தது. ஆனால் தி.முக. ஆட்சி வந்திருந்தால் 2012- 13 ஆண்டுலேயே திட்டத்தை தி.மு.க நிறைவேற்றி இருக்கும்.
ஆனால் அ.தி.மு.க 2011- ல் கையில் எடுக்காத அ.தி.மு.க அரசாங்கம். இப்ப 2020- ல் திட்டம் செயல்படுத்த திட்டம் உள்ளதாக அறிவிக்லாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ரோடு போட மட்டும் தான் பணம் வச்சிருக்காங்க. மற்ற திட்டங்களை செயல்படுத்த பணம் இருக்காது. ஏன்னா, ரோட்ல தான் 20 சதவீதம் கமிசன் கிடைக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ரூ. 600 கோடிக்கு இப்ப ரோடு போடும் பணி ஒதுக்கப்பட்டு அதில் கிடைக்கும் ரூ. 120 கோடியை உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நடக்கும் மனு நீதி முகாம் என்பது பிளேயிங் விசிட். 100 நாள் வேலை பெண்களை வைத்து படம் எடுத்துக் கொண்டு போறாங்க. மக்களிடம் வாங்கிய மனு என்ன என்று சொல்ல முடியுமா? இப்ப தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக, இந்த பிளேயிங் விசிட் முகாம் நடத்துறாங்க. அரை மணி நேரத்தில் 2 ஆயிரம் மனு வாங்குவது சாத்தியமா?
இன்று நடக்கும் கூட்டுறவு வார விழாவுக்காக பத்திரிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரங்களில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி எம்.எல்.ஏக்கள் பெயர் இல்லை. கூட்டுறவு துறை அமைச்சர் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். ஆனால் தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத அறந்தாங்கி ரெத்தினசபாபதி, கந்தர்வகோட்டை ஆறுமுகம் ஆகிய எம்.எல்.ஏக்கள் பெயர்கள் உள்ளது.
அதனால எங்கள் ஆட்சி வந்ததும் கூட்டுறவு சங்கங்களில் தணிக்கை செய்யப்படும். கூட்டுறவு சங்கங்கள் சரியாக நடக்கவில்லை என்று கலைக்கப்படும். அப்ப வந்து இவர்கள் அத்தனை கூட்டுறவு சங்க தலைவர்களிடம் இருந்தும் இந்த விளம்பரக் கட்டணம் வசூலிக்கப்படும். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்பீர்களா என்ற கேள்விக்கு? ஆட்சியர் அ.தி.மு.க பிரமுகர் ஆகிட்டாங்க. எப்படி விளக்கம் கேட்கிறது என்றார்.