Skip to main content

8 வழிச்சாலைக்கு இடைக்கால தடைதான்! - தமிழக அரசு தடையை உடைக்க முயற்சிக்கும்: பாலகிருஷ்ணன் பேட்டி

Published on 22/08/2018 | Edited on 22/08/2018
 


"8 வழிச் சாலைக்கு இடைக்கால தடை வழங்கியிருப்பது வரவேற்கதக்கது. இது இடைக்கால மகிழ்ச்சி மட்டுமே. தமிழக அரசு இந்த தடையை உடைக்க முயற்சி மேற்கொள்ளலாம் அதனை நீதிமன்றம் ஏற்க கூடாது" என சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவாரூர் சிபிஎம் அலுவலகத்திற்கு வந்திருந்த மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்,

"கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் சேதமடைந்துள்ளது. ஆனால் காவிரி டெல்டா கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. தமிழக அரசு நீர் மேலாண்மை பணியில் தோற்றுவிட்டது.

அக்டோபர் 2ல் நடைபெறவுள்ள கிராம சபை கூட்டங்களில் ஊராட்சிகளில் நீர் மேலாண்மை திட்டங்களை மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சார்பில் வலியுறுத்தப்படும். தமிழகத்திற்கு தர வேண்டிய 97 டிஎம்சியை கர்நாடகத்திடம் தமிழக அரசு கேட்டு பெற வேண்டும். உபரியாக வந்த தண்ணீரை மேட்டூர் அணைக்கு ஏற்கனவே வழங்கிவிட்டோம் என கர்நாடக அரசு தெரிவிக்குமேயானால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது.

திட்டமிட்டு காவிரி டெல்டாவை ரசாயண மண்டலமாக்கி இயற்கை வளங்களை அழிக்க மத்திய அரசு நாடு முழுவதும் 55 இடங்களில் வேதாந்தா குழுமம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணை வளங்களை எடுக்க அனுமதி வழங்கிருப்பது கண்டிக்கதக்கது. தமிழகத்தில் உள்ள வளங்களை கார்ப்ரேட் கம்பனிகளுக்கு வழங்க மத்திய அரசு டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வருகிது. மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததாலும் இந்த வழக்கில் கவர்னர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது?

8 வழிச்சாலைக்கு இடைக்கால தடை வழங்கியிருப்பது வரவேற்கதக்கது. இது இடைக்கால மகிழ்ச்சி மட்டுமே. தமிழக அரசு இந்த தடையை உடைக்க முயற்சி மேற்கொள்ளலாம் அதனை நீதிமன்றம் ஏற்க கூடாது" என்று சொல்லி முடித்தார் பாலகிருஷ்ணன்.

சார்ந்த செய்திகள்