தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசியல் கட்சி கொடிகள், கட்சித் தலைவர்களின் படங்களை மறைக்க வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதிகளில் ஒன்று. இதில் தந்தை பெரியார், மற்றும் புலவர்கள் சிலைக்கு விலக்கு உண்டு. அப்படித்தான் பல தொகுதிகளிலும் பின்பற்றி வருகிறார்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகள்.
ஆனால் தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் தஞ்சை நகரம் தொடங்கி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வரை அனைத்து ஊர்களிலும் கட்சிக் கொடிகள் பறப்பதுடன் மறைந்த கட்சித் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்படவில்லை.
தஞ்சையில் ரயிலடியில் உள்ள எம். ஜி. ஆர். சிலை மற்றும் இரவில் திடீரென அமைக்கப்பட்ட ஜெ. சிலைகள் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கிறது. மற்றும் அண்ணா சிலைகள் மறைக்கப்படாமல் உள்ளது. அதே போல ஒரத்தநாட்டிலும் உள்ளது.
தஞ்சை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் செல்லாதா? இல்லை அதிகாரிகளுக்கு தெரியவில்லையா என்கின்றனர் தஞ்சை மக்கள்.