Skip to main content

தினகரன் ஒரு விஷ பாம்பு…அதை அடிக்க கம்பு வேண்டும் ”அந்த கம்புதான் நான்”-திவாகரன் ஆவேசம்

Published on 28/10/2018 | Edited on 28/10/2018

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக மூன்றாக உடைந்தாலும் தற்போது எடப்பாடி,பன்னீர் என சேர்ந்து இருந்தாலும் சசிகலா குடும்பத்திலிருந்து மட்டும் ஆளாளுக்கு தினகரன், பாஸ்கரன், மற்றும் திவாகரன், என கட்சி ஆரம்பித்து திரைமறைவில் இருந்தவர்கள் வெளியே வருவது ஏன்? உண்மையில் மக்கள் மீது என்ன அக்கறை?  தினகரன் கட்சி ஆரம்பிக்கும் போது கூட இருந்த திவாகரன் திடீரென அவரை எதிர்ப்பது ஏன்? அவர்களுக்குள் அப்படி என்னதான் பிரச்சனை? இப்படி ஆயிரம் டாலர் கேள்விகள் அனைத்து மக்கள் மத்தியில் இருக்க …

 

மதுரைக்கு மருது பாண்டியர் குரு பூசைக்கு மரியாதை செலுத்த தனது மகன் ஜெய்யானந்த்”துடன் வர நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் மதுரை பாண்டியன் ஹோட்டலில் ஆலோசனையில் இருந்த சசிகலாவின் தம்பி திவாகரனை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்…

 

thivagaran

 

என்னதான் பிரச்சனை தினகரனோடு?

 

அதிமுக வில் உள்ளவர்கள் விஷப்பாம்பை போன்று படம் எடுக்கும் ”தண்ணிப்பாம்பு” அது தன்னை காப்பாற்றி கொள்ள பயமுறுத்துகிறது. ஆனா இவர் அப்படி இல்லை ”உண்மையிலேயே முழு சுயநலத்தோடு உள்ள விஷ பாம்பு படம் எடுத்து ஆடுகிறது அதை அடிக்க கம்பு வேணும் அந்த கம்புதான் நான்…”தினகரனோடு முதலில் சிறு சிறு பிரச்சனை இருந்தாலும் அக்கா சொன்னதற்காக சேர்ந்து பணியாற்றினேன் கட்சியில் என் ஆதரவாளர்களை உதாசினபடுத்த தொடங்கியவர் என்னையும் தவிர்க்க நினைத்தார். அதை ஒரு கட்டத்தில் அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. யாருக்கும் இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை அக்கா தினகரனிடம் கட்சியை கொடுக்கும் போது 136 எம்.எல்.ஏ வும் இரட்டை இலை என முழு கட்சியாக கொடுத்துவிட்டு போனார் அது இப்ப என்னவா இருக்கு எல்லாமே எங்கள் கையைவிட்டு போய்விட்டது. இதுக்கு காரணம் என்ன ”அக்கா எடுத்த தவறான முடிவு இந்த தினகரன்”அதை முன்பிருந்தே அக்காவிடம் சொன்னேன் அவர் கேட்கவில்லை அதற்கு எல்லோரும் சேர்ந்து அனுவிக்கிறோம்..

 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்புபற்றி உங்கள் கருத்து?

 

அது எடப்பாடிக்கும் தினகரனுக்கும் விரைவில் ஊதபோகும் சங்கு இப்போதைக்கு சந்தோச பட்டுக்கலாம் முடிவு வேறு மாதிரிதான் இருக்கும்

 

வருகிற இடைத்தேர்தல் 20 சட்டமன்றத்திற்கும் சேர்த்து வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

 

கட்டாயம் அதிமுக வெற்றி பிறாது தினகரனாலும் முடியாது ஏன்னா தினகரனை நங்கள் பார்த்து கொள்வோம்… ”கட்டாயம் திமுக வெற்றி பெறும்..”

 

உங்களை பாஜகதான் இயக்குகிறது தினகரனின் செல்வாக்கை குறைக்க என்கிறார்களே?

 

நான் பாஜக பின்னால் போனால் அது தற்கொலைக்கு சமம் அதை காட்டிலும் முட்டாள்தனம் கிடையாது. ஏன்னா தமிழகத்தில் மக்களிடம் பாஜக எதிர்ப்பு ஓட்டம் அதிகம் இருக்கிறது. அது நல்லா தெரிகிறது அப்படி இருக்கும்போது நான் எப்படி போவேன்…. இது தினகரனால் கிளப்பிவிடபடுகிறது…

 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு உங்க குடும்பத்தில் இருந்து பாஸ்கரன், தினகரன், இப்ப நீங்க தொடர்ச்சியாக அரசியல் கட்சி தொடங்குவதன் நோக்கம் அதன் அவசியம் என்ன?

 

மற்றவர்களை பற்றி தெரியாது, இவ்வளவு காலம் கட்சி வளர்ச்சிக்காக மறைமுகமாக செயலாற்றினேன் ஆளும் எடப்பாடி அரசும் ”வடபோச்சே என்று இருக்கும் தினகரனும் சரி எல்லோரும் இந்த கட்சியை வைத்து அவர்களின் வளர்ச்சியை முன்னிறுத்தியே செயல்படுகிறார்கள். ஒரு நாள் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களையும் ”நிர்கதியாக நிர்க்கவைத்துவிட்டு போய்விடுவார்கள் இது நடக்கும்” அப்பதான் என் வேலையை தொடங்குவேன்..அதற்குதான் இந்த கட்சி…

 

அதிமுகவில் யார் தலைவராக வரனும் இல்ல யார் வந்தா ஏற்றுகொள்வீர்கள்?

 

அதுதானே பிரச்சனை ஜெயலலிதா தனக்கு அடுத்த தலைவரை உருவாக்காமல் போனதுதான் ஆளாளுக்கு தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாக இருக்கார்கள். அம்மா மறைந்தப்பவே இவர்கள் என்ன செய்திருக்கணும் என்றால் கழகத்தின் பொதுசெயலாலரை மொத்த உறுப்பினர்களும் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்திருக்கவேண்டும் அதுதான் அதிமுகவின் பை-லா. அத செய்யாமல் விட்டுவிட்டார்கள். எனக்கு தெரிந்து இப்ப இருக்கிற தலைவர்களில் யாருமே தேறுகிற மாதிரி தெரியவில்லை

 

சசிகலா வெளியே வந்தால் ஏற்றுகொள்வீர்களா?

 

அக்கா கட்சிக்கு பொதுவானவர்களாக இருந்தால் சரி ஆனா அவர் அப்படி இல்லையே 

 

அதிமுகவிற்கு எதிர்காலம் இருக்கா?

 

இப்ப ஆளுகிற அதிமுக ஆட்சி அதை நினைத்தா ஆளுகிறது என்று நினைக்கிறீர்கள் கொள்ளை, லஞ்சம், பாஜகவிற்கு அடிமைத்தனம் செய்து எப்படியாவது இந்த மே வரை ஆட்சியில் இருந்து எல்லாத்தையும் சுருட்டிகிட்டு போயிடனும். அது போதும் ஏழு தலைமுறைக்கு நமக்கு கிடைத்த ஜாக்பாட் என்றுதானே நினைத்து மக்களிடம் அதிகமான அதிருப்த்தியை கடந்த 50 வருடத்தில் இல்லாத எதிர்ப்பை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்தாலும் இன்னும் ஏழுதலைமுறைக்கு தமிழகத்தில் ஜெயிக்கவே முடியாது அந்தளவுக்கு கெட்டபெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள்..

 

அமைச்சர் ஜெயக்குமார்…………….?

 

அது அசிங்கத்தின் உச்சம்…என்னத்த சொல்ல…

 

நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி?

 

எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகம் யாரையும் ஏற்றுகொள்ளாது ..

சார்ந்த செய்திகள்