தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. அதேபோல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கிய நிலையில், இன்று (03/05/2021) வரை நீடித்தது.
இதில் திமுக தலைமையிலான கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. அதேபோல் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
எந்தெந்த கட்சிகள், எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதைப் பார்ப்போம்!
அதிமுக - 66
திமுக - 133
காங்கிரஸ் - 18
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 4
பாமக - 5
பாஜக - 4
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.