Published on 05/05/2018 | Edited on 05/05/2018
திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அப்போது அவர் நீட் தேர்வு விவகாரம் குறித்து கூறுகையில்,
80 சதவிகித தமிழக மாணவர்களுக்கு வாய்பில்லாமல் போகும் நீட் எனும் அநீதி நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே நீட் வேண்டாம் என போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நீட் தேர்வு எழுத தமிழகத்தில் இடமில்லை என தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைத்திருப்பது அநீதியான, முட்டாள் தனமான செயல் நீட் எனும் அநீதியை திணித்த மத்திய அரசுக்கு மன்னிப்பே கிடையாது எனக் கூறினார்.