
தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் தொகுதியான போடியில் கடந்த கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்பால் நீர்வீழ்ச்சி முழுவதும் சேதம் அடைந்து பல்வேறு மரங்கள் ஒடிந்து விழுந்து புதர்மண்டி கிடப்பதால் இதனை சற்றும் உணராத பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இறப்பது அதிகரித்து வருகிறது.
போடி அருகே உள்ள ஜக்க நாயக்கன்பட்டி தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பாலமுருகனின் மகன் கார்த்திக் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பொழுது சிதறுண்ட நீர்வீழ்ச்சியில் உள்ள புதரில் சிக்கி இறந்தான். இது போல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு போடி டவுனில் இருந்து குளிக்க சென்ற இரண்டு இளைஞர்களும் புதரில் சிக்கி இறந்தனர்
.
இப்படி உயிர் இழப்பு தொடர்ந்து துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியில் நடந்து கொண்டு தான் வருகிறது. அப்படி இருந்தும் அதை சரி செய்ய மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்வும். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சிதறுதண்ட நீர்வீழ்ச்சி பகுதியில் புதர் மண்டி கிடக்கும் பகுதியை சரி செய்ய ஆர்வம் காட்டாமல் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்கிறது. இனிமேலாவது புதர்களை சரி செய்ய அதிகாரிகள் முன் வரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.