கடந்த வாரம் தினசரிப் பத்திரிகைகளில் ஒரு செய்தி பளிச்சிட்டது. விதார்த் சாந்தினி தமிழரசன் ஜோடியாக நடித்த "வண்டி' படத்தின் தயாரிப்பாளர் முகமது நசீர் என்பவரிடம் இளைஞர் ஒருவர் 19 லட்சம் சீட்டிங் பண்ணியதாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுதான் அந்தச் செய்தி.
இந்தச் செய்தியின் பின்னணி குறித்து விசாரிப்பதற்காக கோடம்பாக்கத்தில் களம்இறங்கினோம். அதற்குமுன் முன்கதைச் சுருக்கம் ஒன்று. துபாயில் தொழிலதிபராக இருக்கும் கேரளாவைச் சேர்ந்த முகமது நசீர் என்பவர்தான் படத்தின் தயாரிப்பாளர். அதே கேரளாவைச் சேர்ந்த தேசிய விருதுபெற்றவர் நடிகை சுரபி லட்சுமி.
திருமணமான சில மாதங்களிலேயே கணவர் விபினுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் விவாகரத்துப் பெற்றார். டைவர்ஸ் வாங்கிய சுரபியை, தன்னுடைய பட நிறுவனத்தின் டைரக்டராக்கி தன்னுடன் இணைத்துக்கொண்டார் நசீர்.
"வண்டி' படம் ஆரம்பித்து சில மாதங்களிலேயே சேட்டை பண்ண ஆரம்பித்தார் ஹீரோ விதார்த். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கம்பெனி வண்டியில் மனைவியை அழைத்து வருவது, குழந்தைகளை அழைத்து வர ஸ்கூலுக்கு அனுப்புவது என ஏகப்பட்ட அக்கப்போர்களுடன் சம்பள தகராறும் நடந்தது. இது முன்கதைச் சுருக்கம்.
இப்ப உள்ள கதைக்கு வருவோம். "வண்டி' படத்திற்கு 2 கோடியே 50 லட்சத்திற்கு சேட்டிலைட் ரைட்ஸ் வாங்கித் தருவதாகச் சொல்- சன் டி.வி. பெயரில் ஃபோர்ஜரி லெட்டர்ஹெட்டைக் காண்பித்து 19 லட்சம் சீட்டிங் செய்ததாகவும் தான் அந்த வா-பர்மீது வழக்கு. ஆனால் தயாரிப்பாளர் நசீரே பலே கில்லாடி. "வண்டி' படத்தில் பணியாற்றியதற்காக ஆர்ட் டைரக்டர் யூனியனுக்கு 6 லட்சம், காஸ்ட்யூமர் யூனியனுக்கு 2 லட்சம், ஆர்ட் அசிஸ்டன்ட் யூனியனுக்கு 2 லட்சம் சம்பளப் பாக்கி வைத்துள்ளார் நசீர்.
இதுபற்றி மேற்படி யூனியன்கள் தரப்பிலிருந்து நெருக்கடி அதிகரித்ததும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் பி.எல். தேனப்பனிடம் சரண்டராகியிருக்கிறார் நசீர்.
"பட்ஜெட் கூடிருச்சு. அதனால சம்பளத்த இப்போதைக்கு தர முடியாதுன்னு சொல்லுங்க' என தேனப்பன் கொடுத்த திருகுஜால ஐடியாப்படி தான் சம்பளப் பாக்கியைத் தராமல் இழுத்தடிக்க ஆரம்பித்தார் நசீர். இதவிடக் கொடுமை, படத்தில் நடித்த சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட்டுகளான பெண்களுக்கும் இம்சையைக் கொடுத்துள்ளார் நசீர்.
"வண்டி' படம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. சமீபத்தில் நடந்த ஆடியோ ரிலீசிலும் தேனப்பன் கலந்துகொண்டார்.
"வண்டி' படத்தின் பிரச்சினையே வண்டி வண்டியாக இருக்கும் போது, கடந்த 24ஆம் தேதி ‘"மங்கி டாங்கி' என்ற படத்தை தேனியில் ஆரம்பித்து ஃபெப்சி யூனியனையே டென்ஷனாக்கி யிருக்கிறார் நசீர்.
நசீரின் "வண்டி' பட விவகாரத்தில் பி.எல். தேனப்பன் பெயரும் அடிபடுவதால், விளக்கம் கேட்க தேனப்பனைத் தொடர்பு கொண்டோம். ""விதார்த் சம்பளப் பிரச்சினை வந்தப்ப என்னிடம் நசீர் வந்தார். பிரச்சினையை முடித்துக்கொடுத்தேன். ரெண்டு வருஷம் கழிச்சு ஆடியோ ரிலீசுக்குக் கூப்பிட்டார்; போனேன். அவ்வளவுதான். மத்தபடி யூனியன்களுக்குத் தரவேண்டிய சம்பளத்தை நான் நிறுத்தச் சொல்லல'' என்கிறார்.
"வண்டி' படம் இரண்டே முக்கால்மணி நேரம் ஓடுவதால் படத்தின் டைரக்டரையும் எடிட்டரையும் துரத்திவிட்டுவிட்டு, தானே எடிட்டிங் செய்யும் வேலையில் முகமது நசீர் இறங்கியிருப்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.