



Published on 17/09/2021 | Edited on 17/09/2021
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா தலைமையில் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை வேலை வாய்ப்பின்மை தினமாக அறிவித்தனர். அதையடுத்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் 100 அடி நீளம், 50 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய பேனர் தயாரித்துக் கொண்டாடினார்கள். அப்போது, நரேந்திர மோடி ஒழிக என்று கோஷங்களை எழுப்பினார்கள்.