
நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்கு நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர்,
''கவர்னர் மாளிகை குறித்த எதிர்விமர்சனங்கள் தொடர்ந்து தமிழகத்தில் வந்து கொண்டிருக்கின்றன. பத்திரிகைகளும், சமூக வலைதளங்களும், தொலைக்காட்சிகளும் இதுகுறித்து விவாதித்து வருவதை எல்லோரும் அறிவார்கள்.
இந்த நிலையில் இந்த செய்திகளை நக்கீரன் இதழில் வெளியிட்ட காரணத்திற்காக நக்கீரன் ஆசிரியரை கைது செய்திருப்பது கண்டத்திற்கு உரியது. இதழியல் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் ஒரு அம்சம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நக்கீரன் பத்திரிகையை பொறுத்தவரை அடக்குமுறைகளை எதிர்கொண்டும், இதுபோன்ற அரச நெருக்கடிகளை சமாளித்தும் தொடர்ந்து வந்த பத்திரிகை. எனவே நக்கீரனும், நக்கீரனுடைய குடும்பத்தினரும் சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நக்கீரன் குடும்பத்திற்கு எங்களுடைய ஆதரவை எப்போதும் தெரிவிப்போம்'' என்றார்.