Skip to main content

"இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது" - உயர் நீதிமன்றக் கிளையில் மத்திய அரசு வாதம்!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

"Sri Lankan refugees cannot be granted citizenship" - Central Government's argument in the High Court branch!

 

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

 

இந்த மேல்முறையீட்டு மனு இன்று (30/07/2021) உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தலைமை நீதிபதி அமர்வு மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்பதால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது" என வாதிட்டார்.  

 

இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, “தனி நீதிபதி மனுவைப் பரிசீலிக்குமாறே உத்தரவிட்டார். குடியுரிமை வழங்குங்கள்; இல்லையெனில் நிராகரியுங்கள். அதற்கு ஏன் மேல்முறையீட்டு மனு தொடர்ந்தீர்கள்? தமிழக அரசின் முடிவாயினும் அது சட்டங்களுக்கு உட்பட்டே முடிவெடுக்கப்பட வேண்டும்" எனக் கூறி, இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

 

சார்ந்த செய்திகள்