Skip to main content

பத்து லட்சம் பேர் ஸ்ட்ரைக்... பல கோடி முடக்கம்...!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் மத்திய மத்திய பா.ஜ.க.மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையும் விரைவில் தனியாருக்கு தாரைவார்க்கும் அபாய நிலை உள்ளது.

 

Tens of millions of people are on strike...   Multi-crore freeze...!


இந்நிலையில் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அளவில் உள்ள  அனைத்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 9 சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

வங்கி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 20 சதவீதம் அதிகரித்து கொடுக்க வேண்டும். வாரத்தில் வேலை நாட்கள் ஐந்தாக மட்டுமே இருக்கவேண்டும். பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும் என12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இந்த வேலை நிறுத்தத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் அதிகாரிகள், ஊழியர்கள், தனியார்துறை வங்கி பணியாளர்கள் என அனைவரும் பங்கேற்கிறார்கள். நாடு முழுக்க 10 லட்சம் பேர் இந்த ஸ்டைக்கில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் பண பரிவர்தனை முடங்கியுள்ளது.

 

Tens of millions of people are on strike...   Multi-crore freeze...!

 

"மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. எங்களது கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஆகவேதான் இந்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். 

கார்ப்பரேட் மற்றும் பெருமுதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட கடனை வசூல் செய்யாமல் அதை தள்ளுபடி செய்து அல்லது வரா கடன் என அறிவித்து முதலாளிகளுக்கு சலுகை காட்டும் அரசு மக்களுக்கு பணி செய்யும் பணியாளர்கள் நலனில் துளியும் அக்கறை காட்டாமல் வீதியில் இறங்கி போராட வைக்கிறது. பொதுத்துறை வங்கிகள் தனியாரிடம் செல்லாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மக்களிடம் உள்ளது என்கிறார்கள் வங்கி ஊழியர்கள். இன்று காலை 10 மணி முதல் இரண்டு நாள் ஸ்டைக் தொடங்கியது இதனால் வங்கி அலுவலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்