Published on 09/05/2020 | Edited on 09/05/2020
கரோனா தொற்று காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் முழுமையாக மூடப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மாற்றாக திருமழிசையில் தற்காலிக சந்தை கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தையானது நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ள நிலையில், தற்போது தமிழக முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவரும் திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தைக்கு சென்று ஆய்வு செய்தனர். அவர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கரோனா தொற்று அதிகம் பரவிய நிலையில், கோயம்பேடு சந்தை கடந்த மே 5 ஆம் தேதி மூடப்பட்டு தற்காலிக சந்தை திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.