Skip to main content

மனைவியின் நினைவு நாளில், கரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ஆசிரியர்!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு உதவி பெறும் பள்ளியில் முதுநிலை ஆசிரியராக பணியாற்றும் விநாயகம் என்பரின் மனைவி சாந்தி(42). இவர் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரியில் மருந்தாளுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு நெஞ்சுவலியால் உயிர் இழந்தார். அவரது நினைவு நாளான இன்று (ஏப்ரல் 8) கரோனா ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக உயிரையும் பொருட்படுத்தாமல், தூய்மை பணிகளை செய்துவரும் சிதம்பரம் நகராட்சியில் உள்ள 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவை தண்ணீர் பாட்டிலுடன் தொகுப்பாக வழங்கினார் அவரது கணவர்.

 

Teacher provided food for wife's Memorial day



காலை 6 மணிக்கு தூய்மை பணியாளர்கள் கையெழுத்து போடுவதற்கு வரும் இடத்தில், காலை உணவு வழங்கப்பட்டதால் அனைவரும் அதை வாங்கி சென்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி தளத்தில் வைத்து சாப்பிட்டனர். பின்னர் உணவு கிடைக்காதவர்களுக்கு, அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு காலையிலே உணவு கிடைத்ததால் அனைவரும் உணவை பெற்றுக்கொண்டு நன்றி கூறினார்கள்.

உணவு வழங்கிய ஆசிரியர் விநாயகத்திற்கு 9 வயதில் ஒரு மகனும், 20 வயதில் வாய் பேசமுடியாத, மனவளர்ச்சி குன்றிய மகன் ஒருவரும் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.  

 

சார்ந்த செய்திகள்