காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காததை கண்டித்து கடந்த ஏப்ரல் 1-ம் தேதி உளுந்தூா் பேட்டை சுங்கசாவடியை அடித்து உடைத்த வழக்கில் தமிழக வாழ்வுாிமை கட்சி தலைவா் வேல்முருகன் கைது செய்யப்பட்டு புழால் சிறையில் அடைக்கப்பட்டாா். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியதையடுத்து வேல்முருகன் இன்று நாகா்கோவில் கோட்டாா் காவல்நிலையத்தில் கையெழுத்து போட வந்தாா்.
பின்னா் அவா் பத்திாிக்கையாளா்களிடம் கூறும்போது.....உளுந்தூா் பேட்டை சுங்க சாவடியை உடைத்ததாகவும் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்காி நிறுவனத்தை முற்றுகையிட்ட புகாாில் போலிஸ் என்னை கைது செய்தது.
பசுமை நிறைந்த விவசாய நிலங்களை அழித்து காா்ப்ரேட் நிறுவனங்களுக்கு வேண்டி 8 வழி சா சாலை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு முமு உடந்தையாக உள்ளது.
கவா்னா் அலுவலகம் மிரட்டலுக்கு தமிழா்கள் அஞ்சமாட்டாா்கள். 7 ஆண்டுகள் சிறை என்று பூச்சாண்டி காட்டுவதை கண்டு தமிழா்கள் பயப்பட மாட்டாா்கள்.
பயங்கரவாதிகள், மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள் எனக்கூறும் பொன் ராதாகிருஷ்ணன் ஆதாரத்தோடு அதை வெளியிட வேண்டும் என்றாா்.