Published on 21/10/2019 | Edited on 21/10/2019

கனமழை பெய்யும் என்பதால் தென்மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனிக்கவும், தகவலை உடனே தரவும் உத்தரவு. கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் மழை மற்றும் அணை நிலவரங்களை ஆய்வு செய்ய வேண்டும். தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து முதல்வர் நடவடிக்கை.