Skip to main content

நித்தியானந்தா நாட்டின் பிரதமர் ஒரு தமிழ் நடிகையா? அதிர வைக்கும் தகவல்!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை நித்தியானந்தா விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும், தற்போது அவருடன் இரண்டு பெண் சீடர்களும், குஜராத்தில் புகார் கூறிய ஜனார்த்தன ஷர்மாவின் மூத்த மகளும், 30 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்களும் அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கென்று தனி 'வெப்சைட்' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க நித்தியானந்தா திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர். மேலும் அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் என அந்த நாட்டு அரசு உதவியுடன் இதெல்லாம் செய்ய போவதாக கூறுகின்றனர். இந்த தீவு வாங்கும் அளவுக்கு நித்தியானந்தாவிற்கு பணம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த பணம் எல்லாம் உலகம் முழுவதும் இருக்கும் நித்தியானந்தா பக்தர்களிடம் நிதியாக பெற்ற பணம் என்று கூறிவருகின்றனர். 
 

nithy



மேலும் எத்தனை கோடிக்கு இந்த தீவை வாங்கினார் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவராமல் ரகசியமாக உள்ளது.  மேலும் இந்த நாட்டில் குடிமகனாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என்றும் குடிமகனாகவும் அதற்கு இந்து என்ற ஒரு தகுதி மட்டுமே போதும் என்று அறிவித்து இருந்ததாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் நித்யானந்தா உருவாக்கும் புதிய நாட்டின் பிரதமராக ஒரு தமிழ் நடிகையை அவர் நியமனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. நித்தியானந்தாவின் பக்தர்கள் அம்மா என்று அழைக்கும் அந்த நடிகை தான் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்பு ஏற்பதாகவும் இந்நாட்டிற்கு அதிகாரம் மற்றும் உரிமை பெற இந்நாட்டை ஐநாவில் பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தற்போது தயாரித்து தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் போலீஸ் தரப்போ நித்தியானந்தா எந்த நாட்டிற்கும் செல்லவில்லை. அவர் இந்தியாவில் தான் இருக்கிறார். அதோடு அவர் வெளியிட்ட வீடியோக்கள் எல்லாம் இமயமலை பகுதிகளில் எடுத்தது என்றும் போலீஸ் தரப்பு கூறிவருகின்றனர். மேலும் விரைவில் நித்தியானந்தா கைது செய்யப்படுவார் என்றும் கூறுகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் குறியீடு - நடிகை தற்கொலை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Bhojpuri actor Amrita Pandey passed awa

போஜ்புரி திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை அம்ரிதா பாண்டே. போஜ்புரி அல்லாது இந்தி படங்கள், வெப் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சில விளம்பரங்களில் கூட நடித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவருடன் மும்பையில் வசித்து வந்த நிலையில் அவரது சகோதரி வீணா பாண்டேவின் திருமணத்திற்காக பீகாரில் உள்ள பாகல்பூரிற்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு அங்கேயே சில நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி பாகல்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த அம்ரிதா பாண்டே, நேற்று முன்தினம் (27.04.2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்ரிதா பாண்டேவின் தங்கை, அவரது அறைக்கு நேற்று மாலை 3.30 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அம்ரிதா பாண்டே மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

சமீப காலமாக, அம்ரிதா பாண்டே தனக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்பு அமையாததால் மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சையும் பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. இறப்பதற்கு முன்பாக அவரது வாட்ஸ் அப்பில், “அவளுடைய வாழ்க்கை இரண்டு படகுகளில் உள்ளது, நாங்கள் எங்கள் படகை மூழ்கடித்து அவளது பாதையை எளிதாக்கினோம்” என்ற வாசகம் அடங்கிய ஒன்றை ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதனிடையே அம்ரிதா பாண்டேவின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Next Story

அதே குற்றச்சாட்டு - சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை மீது மீண்டும் புகார்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
complaint against Sundhara Travels actress radha

முரளி, வடிவேலு உள்ளிட்ட பல பேர் நடிப்பில் 2002ல் வெளியான சுந்தரா ட்ராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. தொடர்ந்து அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்பு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். 

இந்த சூழலில் கடந்த மாதம் ராதா மீதும் அவரது மகன் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த டேவிட் ராஜ், தன் மகனை இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ராதா தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கொடுக்கப்பட்டு, அதன் விசாரணை நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் தரப்பில், ராதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முரளியை ராதா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முரளிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முரளியின் புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து ராதா மீது ஒரே மாதிரியான புகார்கள் எழுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.