வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றியது.
அமாவாசை அன்று நிலா மறைக்கும் போது சூரியன் நெருப்பு வளையமாக தென்பட்டால், அது வளைய சூரிய கிரகணம் ஆகும். 30 ஆண்டுகளுக்கு பிறகு நெருப்பு வளையத்துடன் சூரிய கிரகணம் தோன்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்றும் சூரியக் கண்ணாடி வழியாக பார்க்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர் கோவை, ஈரோடு மாவட்டங்களில் மேகமூட்டம் காரணமாக நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க முடியாததால் பொதுமக்கள், சிறுவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழகத்தில் மதுரை, கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ஊட்டியில் முழு வளைய சூரிய கிரகணம் தெரிந்தது. இதனையடுத்து பொதுமக்கள், மாணவர்கள், சிறுவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் கிரகணத்தை பார்த்து வருகின்றனர். அடுத்த முழு சூரிய கிரகணம் 2020- ஆம் ஆண்டு ஜூன் 21- ஆம் தேதி ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஹரியானாவில் தோன்றுகிறது என்றும், தமிழகத்தில் முழு சூரிய கிரகணம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2031 ஆம் ஆண்டு மே 21- ஆம் தேதி தென்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.