ஆளும் கட்சியினர் திமுக ஒன்றிய கவுன்சிலர்களை கடத்தி செல்வதை தடுக்ககோரி, திமுக வெற்றி பெற்றுள்ள 6 இடங்களில் அசம்பாவிதம் நடைபெறமல் இருக்க பலத்த பாதுகாப்பு வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் புகார் மனு வழங்கினார்.
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தலில் 8 ஒன்றியங்களில் 3 இடங்களில் தனி பெரும்பான்மையுடனும்,மீதம் 5 இடங்களில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1 வது வார்டில் திமுக சார்பாக பொட்டிபுரம் பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயந்தி நேற்று முன் தினம் அதிமுகவினர் ஜெயந்தியிடம் தங்களுக்கு ஆதரவாக செயல்படவேண்டும் என்று கூறி கடத்தி சென்றுவிட்டனர்.
இதே போன்று பெரியகுளம் ஒன்றியம் 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் செல்வம் என்பவரை கடத்தி சென்று அதிமுகவில் இணைத்து கொண்டனர். இந்நிலையில் திமுக கவுன்சிலர்களை அதிமுகவினர் கடத்தி செல்வதை தடுக்க கோரியும், கடத்தியவர்களை மீட்டு தரகோரி மற்றும் நாளை மறுதினம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தலைவர் பதவிக்கு வாக்களிக்களிக்கயுள்ள நிலையில் 6 ஒன்றியங்களில் குண்டர்கள் மூலம் அசம்பாவிதம் நடைபெறவுள்ள நிலை இருப்பதால் அதற்கு பலத்த பாதுகாப்பு வழங்ககோரி மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஸ்ணன் தலைமையில் தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜாராம், மற்றும் திமுக வழக்கறிஞர்கள் திகவினர் ஏராளமானேர் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் மாவட்ட கண் காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனோ... சின்னமனுர், பெரியகுளம் ஒன்றியங்களில் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றதை பொறுக்க முடியாமல் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயந்தி மற்றும் செல்வம் ஆகியோரை பணம் ஆசைகாட்டி கடத்தி சென்று ஜனநாயத்திற்கு புறம்மாக அதிமுகவிடம் சேர்த்துகொண்ட துணைமுதல்வர் பன்னீர் செல்வத்திற்கு வெட்கம் இல்லையா என்றார்.