Skip to main content

பெண் போலீசை கீழே தள்ளி, கையை கடித்து செல்போனை மீட்ட மாணவி.. காவல் நிலையத்தில் கலாட்டா... 

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மனைவி ஜெகதாம்பாள். இவர்கள் வீட்டருகே வசிப்பவர் ராம் அவரது மனைவி புவனேஸ்வரி.  இவர்களது மகள் வாசுகி  கல்லூரியில் படித்து வருகிறார். 

 

p

 

அருகருகே உள்ள ஆறுமுகம் மற்றும் ராம் குடும்பத்தினருக்கு அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.  இந்த நிலையில் இன்று காலை இரண்டு குடும்பத்திலும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றிப்போய் ஆறுமுகம் மனைவி ஜெகதாம் பாளை  ராம் அடித்துள்ளார்.  இதனால் ஆறுமுகம் குடும்பத்தினர் ராம் மீது பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இரண்டு குடும்பத்தையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்துள்ளனர் போலீசார். 


அப்போது ராமின் மகளான மாணவி வாசுகி,  போலீஸ் நடத்திய விசாரணையை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை கவனித்த போலீசார் காவல்நிலையத்தில் வீடியோ எடுக்க கூடாது எனக் கூறியும் கேட்காமல் வாசுகி தொடர்ந்து வீடியோ எடுக்க, அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் ஏட்டு சாந்தகுமாரி என்பவர் மாணவியிடம்  செல்போனை ஆப் பண்ணு இங்க கொடு என கூற,  ’தர முடியாது’ என முரண்டு பிடித்துள்ளார் மாணவி வாசுகி. 

 

ஆகவே, ஏட்டம்மா சாந்தகுமாரி அந்தப் பெண்ணிடம் இருந்த செல்போனை பிடுங்க முயன்றுள்ளார். அதை கவனித்த மாணவியின் தாயான புவனேஸ்வரி ஏட்டு சாந்தகுமாரியை தடுக்க,  ஏட்டம் மாவுக்கும்  மற்ற இரண்டு பெண்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டு இறுதியில் ஏட்டம்மா சாந்தகுமாரியை  கீழே பிடித்துத் தள்ளி தள்ளியுள்ளார் மாணவி வாசுகி. அதோடு மட்டும் விடாமல் தன் செல்போனை பிடுங்க முயன்ற ஏட்டுவின்  வலது கையை பிடித்து நறுக்கெனக் கடித்து விட்டார். இதனால் அந்த காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு கடைசியில் அங்கிருந்த ஒட்டுமொத்த போலீசாரும்  ஏட்டம்மாவையும் இரண்டு பெண்களையும் தனித்தனியாக விலக்குவதற்கு பெரும் பாடுபட்டனர்.

 

 இப்போது ஜெகதாம்பாளை அடித்த வழக்குக்காக ராம் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஏட்டம்மாவை அடித்த வழக்குக்காக அவரது மனைவி புவனேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்ததாக அந்த மாணவி தன்னை போலீசார் தாக்கியதாக கூறி மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளதால் வெளியே வந்தால் அவரையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளார்கள்.

 

 குடும்ப பிரச்சனைக்காக வழக்கு கொடுக்கப் போய் அதை சமாதானப்படுத்த முயன்ற போலீசாரையே தாக்கி அந்த காவல் நிலையத்தையே பதற்றமாக்கிய ஒட்டுமொத்த குடும்பமும் சிறையில்...!


 

சார்ந்த செய்திகள்