Published on 15/04/2021 | Edited on 15/04/2021
![sf](http://image.nakkheeran.in/cdn/farfuture/9cSX8apY5BlWQMyWQiwNRelS_j14wmsAHsCgjcW1VP4/1618488888/sites/default/files/inline-images/369_10.jpg)
தமிழகத்தில் கரோனா 2வது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடுவது துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக தமிழகத்திற்கு 15 லட்சம் கோவிஷீல்டு மருந்தும், 5 லட்சம் கோவாக்ஸின் மருத்தும் அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இதற்கிடையே தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து தர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.