Skip to main content

சேலம் சரகத்தில் விதிகளை மீறிய 344 ஆம்னி பேருந்துகளுக்கு 7.86 லட்சம் ரூபாய் அபராதம்!

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

 


சேலம் சரகத்தில் பிற மாநில ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் இயக்கப்படுகிறதா? அப்பேருந்துகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளதா? அதிக பயணிகளை ஏற்றிச்செல்கின்றனரா? என்பது குறித்து சோதனை செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

o


இதையடுத்து சேலம், தர்மபுரியில் அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மேற்பார்வையில், மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள், சோதனைச்சாவடிகள் அருகே நின்று ஆம்னி பேருந்துகளை மடக்கி கடந்த மாதம் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர். 


கடந்த மே மாதத்தில் மட்டும் 344 ஆம்னி பேருந்துகள் விதிகளை மீறி இயக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடம் இருந்து 7.86 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் வரியாக, 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அனுமதி (பர்மிட்) இல்லாமல் இயக்கப்பட்ட இரண்டு ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்