Skip to main content

சேலத்தில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

Published on 09/02/2020 | Edited on 09/02/2020

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காட்டு வேப்பிலைப்பட்டியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். 

salem district international cricket stadium opening cm palanisamy


சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜு, செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

salem district international cricket stadium opening cm palanisamy

விழாவில் பேசிய ராகுல் டிராவிட், "அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்துதான் வரவுள்ளார்கள். சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. இந்த கிரிக்கெட் மைதானத்தில் என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. சேலத்தைச் சேர்ந்த பந்து வீச்சாளர் நடராஜன் இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பவராக உள்ளார்".  இவ்வாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பேசினார். 

 

சார்ந்த செய்திகள்