Published on 15/01/2020 | Edited on 15/01/2020
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் புத்தாடை உடுத்தி, மதம், இன பேதமின்றி வீட்டில் பொங்கலிட்டு சிறப்பான முறையில் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அன்று, தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் 700 காளைகள் 730 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தீவரம் காட்டி வருகின்றனர்.