Skip to main content

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ. 2,577 கோடி இழப்பு!

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

ll

 

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, "2011 - 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 17,000 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. அதிமுக அரசின் 2016 - 2021ஆம் ஆண்டு ஆட்சியில் இந்தப் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி தொகையாக 20,033 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது. மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்துறையில் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. குறிப்பாக கடந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காரணத்தால் ரூ. 2,557 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரதமர் மோடிக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சரமாரி கேள்வி!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Minister Palanivel Thiagarajan barrage of questions to Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 13 ஆம் தேதி (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே பல்வேறு ஊடகங்களுக்கு பிரதமர் மோடி பேட்டிகளை அளித்து வருகிறார். இது போன்ற ஒரு பேட்டியில் பிரதமர் மோடி பேசுகையில், “சில அரசியல் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குகின்றன. இதனால் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆட்கள் இல்லை. அதே சமயம் பேருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்தk கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Minister Palanivel Thiagarajan barrage of questions to Prime Minister Modi

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள பதிவில், “உலகில் எங்காவது பேருந்து சேவை இல்லாமல் மெட்ரோ ரயில் சேவை மட்டும் இருப்பதைக் காட்ட முடியுமா. பேருந்து சேவையால் மெட்ரோ ரயில் சேவையின் பாதிப்பதை நிரூபிக்க முடியுமா. சென்னை 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்குப் பல ஆண்டுகளாக மத்திய அரசு நிதி தராமல் நிறுத்திவைத்திருப்பது ஏன். பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தால் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“பா.ஜ.க. வாஷிங் மிஷின் போல் செயல்படுகிறது” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
BJp Works like a washing machine  Minister Palanivel Thiagarajan
கோப்புப்படம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தனியார் ஆங்கில இதழில் வெளியான கட்டுரை ஒன்றில், “கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆனது முதல் ஊழல் வழக்குகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர். அவ்வாறு பா.ஜ.க.வில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுமின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் தனியார் ஆங்கில இதழில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி பேசுகையில், “அஜித் பவார், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலத்தின் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவுகான் என 25 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகள் வழக்குகள் தொடர்ந்தன.

அதன் பின்னர் இவர்கள் தங்களது கட்சிகளை விட்டு பா.ஜ.க.வின் இணைந்து விட்டனர்.  இவர்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அனைத்து குற்ற்ச்சாட்டுகளும் ஆவியாகிப் போய்விட்டன. ஏனென்றால் பாஜகவின் வாஷிங் மெஷினில் சேர்ந்து வெள்ளையோடு வெள்ளையாகி விட்டன” எனத் தெரிவித்தார். முன்னதாக நேற்று (02.04.2024) பரப்புரை மேற்கொண்ட போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜாமீன் இல்லாமல் ஓராண்டாக சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.