Skip to main content

குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக்; ‘ஐபிஎல்’க்கு டஃப் கொடுக்கும் ‘ஜிசிபிஎல்’

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Just like the IPL, the GCPL is an auction for players

உலக புகழ் பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் அணிகள்  போல் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக் ( ஜி சி பி எல் ) எனப் பெயரிட்டு கிரிக்கெட் அணிகள் தொடங்கப்பட்டு, 14 அணிகள் ஏலம் எடுக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதி போட்டியில் பல்வேறு துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Just like the IPL, the GCPL is an auction for players

இதனிடையே சீசன் 2 போட்டிகளுக்காண அணிகள் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி குடியாத்தம் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. ஐபிஎல் போட்டிக்கு அணிகள் ஏலம் எடுப்பதைப் போன்று 16 அணிகள் உருவாக்கப்பட்டது. இந்த அணிகளுக்கு வீரர்கள் ஏலம் விடுகின்றனர். இதற்காக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 350 விளையாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர். கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்ய ஒரு அணிக்கு முப்பதாயிரம் பாயிண்ட்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வீரர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

Just like the IPL, the GCPL is an auction for players

இது குறித்து ஜிசிபிஎல் ஒருங்கிணைப்பாளர் சதிஷ் கூறும் போது,  மாநிலத்தின் கடைக்கோடி நகரமான குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களை வெளி உலகத்திற்கு எடுத்துச் செல்லவே இந்த ஜிசிபிஎல் அமைப்பு உருவாக்கப்பட்டது. முதல் சீசனில் நடைபெற்ற விளையாட்டுகளில் பங்கேற்ற சித்து என்ற மாணவன் தற்போது மாநில அளவிலான அண்டர் 19 லீக் போட்டிக்கு தேர்வு ஆகி உள்ளதாகவும் எந்த விதமான வியாபார நோக்கமும் இல்லாமல் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளி கொள்வதற்காகவே இந்தப் போட்டி நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். ஏலம் முடித்து விரைவில் போட்டிகள் தொடங்க உள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

டி20 உலகக் கோப்பை தொடர் : இறுதிப் போட்டியில் இந்திய அணி!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
T20 World Cup Series: Indian team in the final

டி20 உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று (27.06.2024) இரவு கயானாவில் நடைபெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், துபே, பாண்ட்யா, ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் அக்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் ரன் குவிக்க முடியாமல் விராட் கோலி தடுமாறி வரும் நிலையில் நேற்றைய போட்டியிலும் 9 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார். இந்திய அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 46 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமாக விளையாடி இந்தியாவின் ரன்களை உயர்த்தினர். ரோஹித் சர்மா 57 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் குவித்தனர். 

T20 World Cup Series: Indian team in the final

இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 171 ரன்களை சேர்த்தது . 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அக்ஸர் படேல், குல்தீப் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இங்கிலாந்து அணியை 16 ஓவர்கள் 4 பந்துகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதிப்போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் நாளை (28.06.2024) நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இந்தியாவின் இந்த வெற்றியின் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. முன்னதாக 2007 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக்கோப்பை இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தது. 

T20 World Cup Series: Indian team in the final

முன்னதாக நேற்று காலையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்குத் தென்னாப்பிரிக்கா அணி தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் கிர்க்கெட் தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

டி20 உலகக் கோப்பை தொடர்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
T20 World Cup Series; South Africa advanced to the finals

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி தொடங்கியது. இதில் ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இருப்பினும் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர். ஆப்கானிஸ்தான் அணி ஐந்து ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 23 ரன்களை மட்டுமே எடுத்தது.

இறுதியாகத் தென்னாப்பிரிக்காவின் அபார பந்து வீச்சால் 11வது ஓவரின் 5வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களில் ஆப்கானிஸ்தான் அணி சுருண்டது. கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் அணி படைத்தது. 

T20 World Cup Series; South Africa advanced to the finals

அதனைத் தொடர்ந்து 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் களம் இறங்கினர். அதன்படி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ஓவர்களில் 60 ரன்களை குவித்து தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. அதன்படி அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது. மேலும் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தானைத் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.

இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்குத் தென்னாப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது. அதாவது தென்னாப்பிரிக்கா அணி 7 முறை அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த நிலையில் இன்றைய டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளது.

அதே சமயம் டி20 உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவிடம் வெற்றி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இருப்பினும் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர்களே இப்போது வரை முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இன்று (27.06.2024) இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி நடைபெற உள்ளது.