கடந்த நவம்பர் 30 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெற்ற 'ஸ்போர்ட்ஸ் அவார்ட்- 2024' விழாவில் விளையாட்டை ஊக்குவிப்பதற்கான சிறந்த மாநிலமாக தமிழக அரசுக்கு மாநில விருது வழங்கப்பட்டுள்ளது. விருது மற்றும் பாராட்டு சான்றிதழை தமிழக முதல்வரிடம் நேரில் வழங்கி தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பாராட்டைப் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தின் விளையாட்டுத்துறை தலைநகராக உயர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டலில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை எடுத்து வரும் முயற்சிகளுக்கு பல்வேறு திசைகளில் இருந்து பாராட்டுகளும், அங்கீகாரங்களும் குவிந்து வருகின்றன.
இந்த சாதனையின் தொடர்ச்சியாக, புது தில்லியில் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற்ற 'ஸ்போர்ட்ஸ் அவார்ட்- 2024' விழாவில், ‘விளையாட்டை ஊக்குவிப்பதற்கான சிறந்த மாநில விருது’ - Best State Promoting Sports Award தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது.
இப்பெருமைமிகு விருதையும், சான்றிதழையும் முதலமைச்சரிடம் தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் வழங்கி வாழ்த்து பெற்றோம். விளையாட்டுத் துறையில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்திட வாழ்த்திய நம் முதலமைச்சருக்கு நன்றி கூறி மகிழ்ந்தோம்' என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தின் விளையாட்டுத்துறை தலைநகராக உயர்த்திட மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டலில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை எடுத்து வரும் முயற்சிகளுக்கு பல்வேறு திசைகளில் இருந்து பாராட்டுகளும், அங்கீகாரங்களும் குவிந்து வருகின்றன.… pic.twitter.com/gnPtLKSQXp
— Udhay (@Udhaystalin) December 4, 2024