Skip to main content

தாசில்தாரிடம் மனு கொடுத்த விவசாயிகள் மீது போலீஸ் வழக்கு!!

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

அரியலூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் மத்திய அரசு ஓ.என்.ஜி.சி திட்டம் செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தக்கோரி அகில இந்தியமக்கள் சேவை பிரிவு விவசாய சங்க தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமையில் நீர்வள ஆர்வலர் தியாகராஜன் உட்பட 10 கிராமங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆண்டிமடம் துணை தாசில்தார் வேலுமணி யிடம் மனு கொடுத்தனர்.

 Police file case against farmers who filed petitions


கூட்டமாக சென்று மனு கொடுத்தபோது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக ஆண்டிமடம் வி.ஏ.ஒ புஷ்பலதா ஆண்டிமடம் போலீசிடம் ஓடிப்போய் புகார் கொடுக்க, உடனடியாக ராக்கெட்வேகத்தில் விவசாயிகள் மீது போலீஸ் வழக்கு போட்டுள்ளது. பொதுவாக கிராமத்தில ஒரு பழமொழி சொல்வாங்க ''எருமைமாடு போறது கண்ணுக்கு தெரியல ஆனால் ஈ போறது தெரிஞ்சிடிச்சு போல'' என்பார்கள் நாட்டில் எவ்வளவு  பெரிய குற்றங்கள் தெரிந்தும், தெரியாமலும் நடக்கிறது, நடந்துள்ளது. அதிலே கண்டுபிடிக்க முடியாத விஷயங்கள் ஏராளம் ஏராளம் அப்படி இருக்கும்போது விவசாயிகளும் பொதுமக்கள்தானே. அவர்களும் பொதுமக்கள் இல்லை என்றால் பொதுமக்கள் என்பவர்கள் யார் ? என்று கேட்கிறார்கள் தாலுக்கா அலுவலகம் வந்த பொதுமக்கள்.

இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்றுசட்டம் போட்டாலும் போடும் போல தமிழக அரசு. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.